தூத்துக்குடி மாவட்டத்தில் நவம்பர் 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…!ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு …!
தூத்துக்குடி மாவட்டத்தில் நவம்பர் 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சையாக நடைபெறும்.இதனால் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூருக்கு படையெடுப்பார்கள்.
இந்நிலையில் இந்த ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நடப்பதால் அம்மாவட்டத்துக்கு நவம்பர் 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆணை பிறப்பித்துள்ளார்.