என்னையும் ரசிகர்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது …!நியாயத்தை புரிந்துகொண்டதற்கு நன்றி…!ரஜினிகாந்த் அறிக்கை

Default Image

என்னையும் ரசிகர்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை ராகவேந்திர மண்டபத்தில் சந்தித்தார்.
Image result for ரஜினிகாந்த்
 
வரும் சட்டப்பேரவை தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன். உள்ளாட்சித் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்று ரசிகர்கள் மத்தியில் பேசினார்.இது முதலே ரஜினியின் அரசியல் எதிர்பார்ப்பு அதிகரித்தது.ஆனால் அதன் பிறகு பெரிதாக அவர் ஏதும் கூறவில்லை.
அதேபோல் அக்டோபர் 22 ஆம் தேதி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன்  ரஜினி சென்னையில்  2 மணிநேரம் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் ரஜினிகாந்த்  அக்டோபர் 23 ஆம் தேதி அறிக்கை ஒன்றை தனது மக்கள் மன்றத்துக்கு வெளியிட்டார் .
ரஜினி வெளியிட்ட அறிக்கை:

இந்நிலையில் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் ,ரஜினி மக்கள் மன்றத்தில் நியமனம், மாற்றம், ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் என் ஒப்புதலுடனே அறிவிக்கப்படுகின்றது. அனுமதியின்றி நடந்ததாக சிலர் பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.
மன்றத்தை வைத்து அரசியலில் சாதிக்க முடியாது.வெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால், அவரது புத்தி பேதலித்துள்ளது.மன்றத்தை வைத்து யாரும் அரசியல் செய்யக் கூடாது .மக்களுடைய ஆதரவு இல்லாமல் அரசியலில் சாதிக்க முடியாது.

தமிழகத்தில் ஒரு புதிய அரசியலை அறிமுகப்படுத்தி, மாற்றத்தை ஏற்படுத்தவே அரசியலுக்கு வருகிறோம். மற்றவர்களைப் போலவே அரசியல் செய்வதற்கு நாம் ஏன் புதிதாக அரசியலுக்கு வர வேண்டும்.அரசியலில் பதவி சுகத்துக்கும், பணம் சம்பாதிக்கும் எண்ணத்துடனும் வருபவர்களை பக்கத்தில் சேர்க்கமாட்டேன் என்று பரபரப்பாக  அறிக்கையில் உள்ளது. பதவி சுகம் காணும் எண்ணத்தில் உள்ளவர்கள் இப்போதே விலகி விடுங்கள் என்றும்  மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி எச்சரிக்கை விடுத்தார்.
Image result for ரஜினிகாந்த்
 
அதேபோல்  நம் கொள்கைகளுக்கு ஒத்துவராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தமில்லை. 30, 40 ஆண்டுகள் ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே, மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ, அரசியலில் ஈடுபடுவதற்கோ முழு தகுதி ஆகிவிட முடியாது. வீண் வதந்திகளில் நம்முடைய நேரத்தை வீணடிக்க கூடாது. மன்றத்திற்கு உண்மையாக செயல்படுபவர்களை நான் நன்கு அறிவேன்.அந்த உழைப்பு வீண் போகாது என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.
இதன் பின்னர் இன்றும் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனையில் ஈடுபட்டார்.ஆலோசனைக்கு பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில்,
ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை:
அந்த அறிக்கையில்,என்னையும் ரசிகர்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. உண்மையான ரசிகர்கள் கிடைத்ததற்காகப் பெருமைப் படுகிறேன்.நாம் எந்தப் பாதையில் போனாலும் அது நியாயமானதாக இருக்கட்டும்.23ம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில் உள்ள நியாயத்தை புரிந்துகொண்டதற்கு நன்றி.உங்களை போன்ற ரசிகர்களை அடைந்ததற்கு மிகவும் பெருமை படுகிறேன் என்று அறிக்கையில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்