18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு…!தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைப்பு …!தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு விவரம் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நேற்று (செப்டம்பர் 25 ஆம் தேதி) தீர்ப்பு வழங்கினார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.
அவர் வழங்கிய தீர்ப்பில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார்.மேலும் அவர் கூறுகையில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் .அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.மேலும் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு விவரம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு விவரம் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் நடக்காமல் முன்கூட்டியே இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.