ரூ 15,00,000 எங்கே…?பிரதமர் மோடியின் மேக் அப் கலைஞருக்கு ஊதியம் …!!
பிரதமர் மோடி தனது மேக் அப் கலைஞருக்கு மட்டும் மாதம் 15 லட்சம் ரூபாய் ஊதியம் வழங்குவதாக தகவல் வைரலாக பரவி வருகிறது.
அண்மையில், பிரதமர் மோடிக்கு பெண் ஒருவர் மேக் அப் செய்வது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனால், பிரதமர் மோடி தனது முகத்தை மேக் அப் செய்வதற்காக தனி ஆள் வைத்துள்ளார் என்றும் அவருக்கு 15 லட்சம் ரூபாய் ஊதியம் வழங்குவதாகவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில், அத்தகவல் உண்மையில்லை என்றும் லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள மோடியின் மெழுகு சிலைக்கு பெண் ஒருவர் அளவெடுத்துள்ளது தெரிய வந்தது.நான் வெற்றி பெற்றால் ஒவ்வொருவருக்கும் தலா 15 லட்சம் தருவதாக கூறிய பிரதமர் தற்போது 15 லட்சம் ரூபாய் தனது மேக் அப் கலைஞருக்கு ஊதியமாக வழங்கியது சமூக வலைதளத்தில் நெட்டிசன்களால் கலாய்கப்பட்டு வருகிறது.
dinasuvadu.com