உள்ளாட்சித் தேர்தல் இன்னும் ஏன் நடத்தவில்லை…!தமிழக தேர்தல் ஆணையம் 4 வாரங்களுக்குள் உச்ச நீதிமன்றம் உத்தரவு …!
உள்ளாட்சித் தேர்தல் இன்னும் ஏன் நடத்தவில்லை என்று தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தக்கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதமே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என கூறிய நிலையில் இன்னும் ஏன் நடத்தவில்லை என்று தமிழக தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பியுள்ளது.அதேபோல் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவடைந்து அக்டோபர் 24-ம் தேதியுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தது.எனவே நான்கு வாரங்களுக்குள் மாநிலத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.