குற்றாலத்துக்கு கும்பிடு போட்ட 18 MLAக்கள் அடுத்த டார்கெட் மதுரை ..!!
குற்றாலத்தில் சொகுசுவிடுதியில் தங்கிருந்த 18 MLAக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்ற தீர்ப்பை தொடர்ந்து குற்றாலத்தில் இருந்து MLAக்கள் புறப்பட்டனர்.மேலும் புஷ்கரவிழாவிலும் கலந்து கொண்டு ஆற்றில் குளித்தனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை மாற்றக் கோரி கடந்த ஆண்டு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்கள் மனு அளித்தனர். மேலும் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்விலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
ஆட்சியின் மீதான இந்த் வழக்கு தொடரப்பட்டதையடுத்து தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் தனபாலுக்கு அதிமுக கொறடா ராஜேந்திரன் பரிந்துரைத்தார். இந்த பரிந்துரையை ஏற்ற சபாநாயகர் தனபால் 18 எம்.எல்.ஏக்களையும் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
18 MLAக்கள் மீதான இந்த தீர்ப்பிற்கு MLAக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் அலோசனை படி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய பெஞ்ச் கடந்த ஜனவரி 24-ந் தேதி வழக்கு விசாரணைகளை முடித்து வைத்து தீர்ப்பை மட்டும் ஒத்தி வைத்தனர்.
இந்த வழக்கு இன்று பகல் 1 மணிக்கு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதில் 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தது சரியா? தவறா? என்கிற முடிவுக்கு வர இயலவில்லை என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார். ஆனால் 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது சபாநாயகர் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டிருக்கிறார் என நீதிபதி சுந்தர் தீர்ப்பளித்தார். இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால் 3-வது நீதிபதியின் தீர்ப்புக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக 3வது நீதிபதியின் தீர்ப்பு வரும் வரை எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் தொடரும் என்றும் 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். தற்போது வந்த இந்த தீர்ப்பால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கான நெருக்கடி தணிந்துள்ளது. மேலும் 3-வது நீதிபதியின் தீர்ப்பு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பும் நடத்தக் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லும் என்று உத்தரவிட்டது.
இந்த சூழ்நிலையில் 18 எம்.எல்ஏ.க்களின் தகுதிநீக்கம் தொடர்பான தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் தங்கியிருந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றனர்.விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்து கடந்த சில நாட்களாக இங்கு தங்கியிருந்தனர். தீர்ப்பு பதகமாக வெளியான நிலையில் அவர்கள் மதுரைக்கு புறப்பட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தினகரன்ன் ஆதரவாளரான செந்தில்பாலாஜி, பதவி இழந்ததால் தாங்கள் யாரும் வருத்தப்படவில்லை என்றார்.
DINASUVADU