கர்நாடக இசையை கதி கலங்க வைத்த மீடு புயல்……!!….கலக்கத்தில் கர்நாடக கலைஞர்கள்…!!

Default Image

இந்தியா முழுவதும் மீடு என்ற ஹேஷ்டேக் மூலம் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டலகளை பகீரங்கமாக வெளிபடுத்தி வருகின்றனர்.இந்த மீடு புயல் மத்தியில் ராஜினா சேதம் மற்றும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இப்புயல் கர்நாடக இசையையும் மீடுபுயல் கதிகலங்க வைத்துள்ளது மீடுவில் பாலியல் புகாருக்கு ஆளான கர்நாடக கலைஞர்களான சித்ரவீணா ரவிக்கிரன், ஓ.எஸ். தியாகராஜன் உட்பட 7 பேர் மீது கர்நாடக சங்கீத வித்வான்கள் மார்கழி விழாவில் இருந்து வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Image result for ஓ.எஸ்.தியாகராஜன்
கர்நாடக இசை கலைஞரான 71 வயது ஓ.எஸ்.தியாகராஜன் தன்னிடம் சங்கீதம் கற்றுக்கொள்ள வந்த மாணவியை கட்டிப்பிடித்து பாலியல் சீண்டல் மற்றும் அத்துமீறலில் ஈடுபடமுயன்றார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.இதே போல மற்றொரு கலைஞரான சித்ரவீணா மற்றும் சங்கீத கலாநிதினு பட்டம் பெற்ற ரவிக்கிரண், மற்றும் மிருதங்க சக்கரவர்த்திகளாக தங்களை காட்டிக் கொண்ட மன்னார்குடி ஈஸ்வரன், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், திருவாரூர் வைத்தியனாதன், வயலின் வித்வான்கள் ஆர்.ரமேஷ் மற்றும் நாகை ஸ்ரீராம் ஆகியோர் தங்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் பாலியல் சீண்டல் குறித்து மீடூவில் பதிவிட்டனர்.
Image result for MEETOO
இந்த மீடு பாலியல் குற்றச்சாட்டில் கர்நாடக இசை கலைஞர் நாகை ஸ்ரீராமை தவிர மற்ற 6 பேரும் 50 வயதை கடந்தவர்கள் பாலியல் புகாரில் சிக்கி உள்ள இவர்கள் 7 பேரும் வருகிற டிசம்பர் மாதம் சென்னை மியூசிக் அகடாமியில் நடக்கும் மார்க்கழி திருவிழாவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.மேலும் இவர்கள் 7 பேரும் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளது உண்மையாக நிரூபிக்கப்பட்டால் மியூசிக் அகாடமியில் இருந்தே உடனடியாக நீக்கப்படுவார்கள் என மியூசிக் அகடாமி தலைவர் முரளி தெரிவித்தார்.
Image result for ரவிக்கிரண்
இசை வரமாக கருதப்படும் இந்த உலகில் இசைத்துறையில் இருந்து கொண்டு  இப்படி பெண்களிடம் விபரீத நடவடிக்கைகளில் இறங்கியதாக புகார் எழுந்ததால் இசை கலைஞர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுதாக முரளி தெரிவித்தார்.இந்நிலையில் ஏற்கனவே மீடூ பாலியல் புகாரால் தமிழ் திரையுலகம் திணறி வரும் நிலையில் இப்பொழுது கர்நாடக இசை உலகம் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்