வீணாக போன விராட் கோலி சதம் …!இந்திய அணியை மிரட்டிய சாய் ஹோப்…!2 வது போட்டி சமனில் முடிந்தது…!
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்து வருகிறது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் பெரிதாக ஏதும் ரன் அடிக்கவில்லை.
ரோகித் சர்மா 4 ரன்களுக்கும் தவான் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்த பின்னர் வந்த கேப்டன் விராட் கோலி மற்றும் அம்பட்டி ராயுடு ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தனர்.அம்பட்டி ராயுடு 80 பந்துகளில் 73 ரன் எடுத்து ஆட்டமிழக்க விராட் கோலிஅதிவேக 10,000 ரன் சதம் என ஆட்டமிழக்காமல் 129 பந்துகளில் 157 ரன்கள் குவித்தார்.இதில் 13 பவுண்டரிகளும் , 4 சிக்ஸ்ர்களும் அடங்கும்.இந்திய அணி 50 ஓவர்களுக்கு 6 விக்கெட்டை இழந்து 321 ரன்கள் குவித்தது.
இதன் பின்னர் களமிறங்கிய 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்கள் அடித்து போட்டியை சமன் செய்தது.வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக 123*,ஹெட்மயேர் 94 ரன்கள் அடித்தனர்.இந்திய அணியின் பந்துவீச்சில் குலதீப் மட்டும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனால் 2 வது ஒருநாள் போட்டி சமனில் முடிந்ததால் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.