வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்க வாய்ப்பு :
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளை மறுநாள் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் உள்ளதாகவும், கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மலை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.