முத்துராமலிங்கத்தேவர் குருபூஜைக்கான தங்க கவசத்தை பெற்றுக்கொண்டார் துணை முதல்வர்…!!
முத்துராமலிங்க தேவர் குருபூஜையின் சிலைக்கு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட தங்க கவசத்தை, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.
ஆண்டு தோறும், அக்டோபர் 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை, தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவின் போது, தேவர் சிலைக்கு அணிவிப்பதற்காக 13.5 கிலோ எடைகொண்ட தங்க கவசத்தை,ஜெயலலிதா வழங்கினார்.
இதையடுத்து ஒவ்வொரு தேவர் ஜெயந்தி விழாவின்போதும், அ.தி.மு.க. சார்பில் முத்து ராமலிங்கதேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு வருகிறது. விழா முடிந்ததும் மதுரை அண்ணாநகரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கி லாக்கரில் தங்க கவசம் வைக்கப்படும். இந்த ஆண்டு நடக்கும் தேவர் ஜெயந்தி விழாவிற்காக, லாக்கரில் இருந்த தங்க கவசத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேவர் விழா கமிட்டி பொறுப்பாளர் காந்திமீனாள் ஆகியோர் கையெழுத்திட்டு பெற்றுக்கொண்டனர். இதனையடுத்து தங்க கவசமானது பசும்பொன்னிற்கு போலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
DINASUVADU