உடல்நலக்குறைவால் கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி காலமானார்…!
உடல்நலக்குறைவால் கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி (82) காலமானார்.
தஞ்சை மாவட்டம் புஞ்சை என்ற கிராமத்தை சேர்ந்த ந.முத்துசாமி பத்மஸ்ரீ விருதை பெற்றவர். புஞ்சை கிராமத்தில் 1936 மே மாதம் 25-ம் தேதி பிறந்தவர்.தெருக்கூத்தை தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்களுள் இவரும் ஒருவர்.தெருக்கூத்து மீது அதிகம் ஆர்வம் கொண்டவர்.பல நாடகங்களை இயக்கி உள்ளார்.பின்னர் இவர் கூத்துப்பட்டறை ஒன்றை தொடங்கினார். கசடதபற, நடை போன்ற இலக்கிய இதழ்களை சிறுகதைகளாக வெளியிட்டவர்.2012-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார் ந.முத்துசாமி. இவரது பட்டறையில் விஜய் சேதுபதி, விமல், பசுபதி போன்றோர் நடிப்பை கற்றார்கள்.முத்துசாமி எழுதிய ந. முத்துசாமி கட்டுரைகள் எனும் நூல் தமிழக அரசின் விருதை பெற்றது.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி காலமானார்.