நவம்பர் 2இல் ரிலீசாக போகுதா சர்கார்? அப்போ தீபாவளி?!
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளியன்று வெளியாக உள்ள திரைப்படம் சர்கார். இப்படத்தை சன் பிக்கசர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து உள்ளது. கீர்த்தி சுரேஷ், வரலெட்சுமி சரத்குமார், ராதாரவி ஆகியோர் உடன் நடிக்கின்றனர்.
இப்படம் நவம்பர் 6ஆம் தேதியன்று.ரிலீசாக உள்ளது. ஆனால் அன்றய தினம் செவ்வாய் கிழமை என்பதால் ரிலீஸ் செய்ய வேண்டாம் என பட விநியோகிஸ்தர்கள் கூறி வருகின்றனர். அவர்கள் நவம்பர் 2ஆம் தேதியன்று அதாவது வெள்ளிகிழமை படத்தை ரிலீஸ் செய்ய சொல்லி தயாரிப்புதரப்பிடம் கூறி வருகின்றனர். படம் எப்போ வந்தாலும் அன்றய தினம் தளபதி ரசிகர்களுக்கு தீபாவளிதான்.
DINASUVADU