ரேஷன் அரிசி கடத்தல்…தமிழக அரசை கேள்விகளால் வெளுத்த நீதிமன்றம்….!!

Default Image

சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சவுஜனா தாக்கல் செய்த மனுவில், ரேஷன் அரிசி கடத்தியதாக என் கணவர் அமர்நாத்தை காவல்துறையினர் கைது செய்தனர். எனது கணவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். எனவே, வேலூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலையில்  ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், மனுதாரரின் கணவர் தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டுள்ளார். அவர் பலமுறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரயில் மூலம்தான் தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுகிறது. பெரிய அளவில் நடைபெறும் கடத்தலை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. மாறாக குறைந்த அளவில் அரிசியைக் கடத்துபவர்களையே அதிகாரிகள் பிடிக்கிறார்கள்.
ரேசன் அரிசி இரண்டு முறை வேகவைக்கப்படுகிறது. நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கவே இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ரேசன் அரிசி கடத்தல் குறித்து இந்த நீதிமன்றம் தமிழக அரசிடம் கீழ்கண்ட கேள்விகளை எழுப்புகிறது.
அதன் விவரம் வருமாறு:
தமிழகத்தில் எத்தனை பேருக்கு ரேசன் கார்டு வழங்கப் பட்டுள்ளது?. அவர்களுக்கு இலவச அரசி எவ்வளவு வழங்கப் படுகிறது? வழங்கப்படும் இலவச அரிசி கார்டு வைத்திருப்பவர் களுக்கு போதுமா? இல்லையா?
ரேசன் அரசி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சிவில் சப்ளை துறை அதிகாரிகள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதா? எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் மொத்த இலவச அரிசியின் மதிப்பு என்ன?. இரண்டு முறை வேகவைத்தல் என்ற முறை எதற்காக?
கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி ஒழுங்காக பயன்படுத்தப்படுகிறதா? இலவச அரிசியை சட்டவிரோதமாக கடத்துபவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இந்த கடத்தல் பேர்வழிகள் எத்தனை பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது? இந்த கேள்விகளுக்கு வரும் நவம்பர் 1ஆம் தேதி தமிழக அரசு பதில் தரவேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்