அதிர்ச்சி 542 பேர் பலி…பன்றிக்காய்ச்சலால் கொடூரம்…!!
நாடு முழுவதும் இதுவரை 542 பேர் பலியாகி உள்ளத்தாக மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு
நாடு முழுவதும், நடப்பாண்டில் இதுவரை பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் 542 பேர் பலியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஹெச்1என்1’ வைரஸ் காய்ச்சல் பாதிப்பு குறித்த விபரங்களை தினமும் அனுப்பி வைக்க மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் மட்டும், 2017ம் ஆண்டில் 2,896 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களை அழிக்கவும் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் 82 நடமாடும் மருத்துவ குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. டெங்கு காய்ச்சலை கண்டுபிடிக்கும் சோதனை மையங்கள் 31-ல் இருந்து 125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை தோறும் டெங்கு தடுப்பு தினம் என அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், அரசு அலுவலகங்கள், பொது மக்கள் கூடும் இடங்கள் என பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சலின் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி உறுதிமொழி எடுக்கப்படுகிறது.பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டு செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
DINASUVADU