எம்ஜிஆர் வெளிநாட்டு சிகிச்சை…!சிகிச்சை தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் தான் கேட்க வேண்டும்…!அப்போலோ நிர்வாகம் அதிரடி தகவல்
எம்ஜிஆர் சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் குறித்து இன்று (அக்டோபர் 23 ஆம் தேதி) ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ நிர்வாகம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் எம்ஜிஆரின் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோவுக்கு உத்தரவு பிறப்பித்தது.
இது தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், எம்ஜிஆரின் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோவுக்கு உத்தரவு பிறப்பித்தது.எம்ஜிஆரை வெளிநாடு அழைத்துச் செல்ல எந்த அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது என ஆணையம் கேள்வி எழுப்பியது .அதேபோல் 1984 ஆம் ஆண்டு அப்போலோவில் இருந்து சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு எம்ஜிஆர் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.அதேபோல் எம்ஜிஆருக்கு அளிக்கப்பட சிகிச்சை குறித்து 34 ஆண்டுகளுக்கு ஆவணங்களை கேட்டுள்ளது விசாரணை ஆணையம்.
மேலும் இதன் மூலம் எம்ஜிஆரை அழைத்துச்சென்றது போல ஜெயலலிதாவை அழைத்து செல்ல எங்கு சிக்க ஏற்பட்டது என்று அறிய நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முடிவு செய்தது.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 23 ஆம் தேதி) ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ நிர்வாகம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.அந்த மனுவில், எம்ஜிஆர் சிகிச்சை தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் தான் கேட்க வேண்டும். அமெரிக்காவில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து மருத்துவமனைக்கு தெரியாது.மேலும் எம்ஜிஆர் சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதால் அரசிடம் உள்ளது.வெளிநாட்டில் சிகிச்சை தர அழைத்துச் சென்ற போது எடுக்கப்பட்ட முடிவுகள் எல்லாம் அரசிடமும் உள்ளது என்று அப்போலோ நிர்வாகம் பதில் மனுவில் தெரிவித்துள்ளது.