ரூ 1,46,000,00,00,000 செலவு…கடல் மீது பாலம்..அசத்தியது சீனா…!!

Default Image

சீனா_வில் 1,46,000  கோடி செலவில்  கட்டப்பட்ட மிக பிரமாண்டமான கடல்வழி பாலம் பயன்பாட்டுக்கு வந்தது.
 இந்தப் பாலம் ஹாங்காங், மக்காவ் நகரங்களை சீனாவின் ஜூகாய் நகரத்துடன் இணைக்கிறது. (Image: Reuters)
ஹாங்காங் – சீனாவின் நிலப்பரப்பிலுள்ள சுஹாய் நகர் (Zhuhai) ஹாங்காங் மற்றும் மக்காவ் என மூன்று முக்கிய நகர்களைக் கடல் வழியாக இணைக்கும் 55 கிலோமீட்டர் (34 மைல்) நீளமுள்ள உலகின் மிக நீண்ட கடல் பாலம் நாளை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 23) அதிகாரபூர்வமாகத் திறப்பு விழா காண்கிறது.
 சீன அதிபர் சீ ஜின்பிங்க் உலகிலேயே மிகப்பெரிய கடற்பாலத்தை நாளை திறந்து வைக்கவுள்ளார். (Image: Reuters)ஹாங்காங், மக்காவ் உள்ளிட்ட 11 நகர்களை ஒன்றிணைக்கும் பிரச்சாரத்தோடு தொடங்கப்பட்ட பிரம்மாண்டமான இந்தத் திட்டத்திற்கு 20 பில்லியன் டாலர் செலவழிக்கப்பட்டிருக்கிறது.இந்திய ரூபாயை டாலர் மதிப்பில் நாம் கணக்கீட்டால் சுமார் ஒரு லட்சத்தி 46,000 கோடி ஆகும்..
 கடலில் 55கி.மீ . நீளத்துக்கு  பாலம்  அமைக்கப்பட்டுள்ளது. (Image: Reuters)
இந்த ஆறுவழிச் சாலைகளைக் கொண்ட கடல் பாலம், 70 மில்லியன் மக்களைக் கொண்ட பொருளாதார மண்டலத்தை ஒருங்கிணைக்கிறது. இந்த பொருளாதார மண்டலத்தின் மொத்த ஆண்டு உற்பத்தி 1.51 டிரில்லியன் டாலராகும். இந்தத் தொகை ஆஸ்திரேலியா, ஸ்பெயின் அல்லது மெக்சிகோ நாடுகளின் பொருளாதார மதிப்பை விடக் கூடுதலான மதிப்புடைய தொகையாகும்.
 இந்தப் பாலத்தை பார்வையிட பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. (Image: AP)9 ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வந்த இந்தப் பாலம் மேற்குறிப்பிட்ட மூன்று நகர்களை சுமார் ஒரு மணி நேர பயண இடைவெளியில்  இணைக்கிறது.இந்தப் பாலத்தின் திறப்பு விழாவில் சீனாவின் அதிபர் ஜீ ஜின்பெங் கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 வண்ண விளக்குகளில் ஒளிமயமாக காட்சியளிக்கும் சீனா -ஹாங்காங் கடற்பாலம் (Image: AP)
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்