பிரம்மாண்டத்தை பேச வைத்த படம்……….என் மனதை உலுக்கிய படம் இது ……………இலக்கியம்யா…….நெகிழ்ந்த பிரம்மாண்டம்…….!!

Default Image

நடிகர் கதிர் நடித்து நடிகை ‘கயல்’ ஆனந்தி ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘பரியேறும் பெருமாள்’. இந்த படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கிறார். மாரி செல்வராஜ் இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமாவை கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Image result for pariyerum perumal‘பரியேறும் பெருமாள்’ படத்தை ‘அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா’ போன்ற படங்களை இயக்கிய தமிழ் சினிமாவின் முன்னணி இளம் இயக்குநராக வலம் வரும் பா.இரஞ்சித் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ மூலம் இந்த படத்தை தயாரித்திருந்தார்.
Related image
இந்த படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேவும் ப்லத்த வரவேற்பை பெற்றது. தற்போது, இப்படத்தை பார்த்து ரசித்த பிரபல இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
 
அதில் பரியேறும் பெருமாள் சினிமாவில் ஒரு இலக்கியம் என்றும், அது என் மனநிம்மதியை குலைத்துவிட்டது என்றும் பதிவிட்டுருந்தார். பாராட்டு இயக்குநர் சங்கருக்கு  பட தயாரிப்பாளர் பா.ரஞ்சித்  ட்விட்டரில் நன்றி தெரிவித்தார்.
Image result for pariyerum perumal
மேலும் இந்த படத்தில் கருப்பை என்ற பெயருடைய கன்னி வகை நாய் ஒன்று நடித்திருந்தது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை மேலும் மெருகுட்டியது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தினை ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருந்தார், ஆர்.கே.செல்வா படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்