அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள்…நடுங்கும் கனடா…!!
கனடாவின் மேற்கு கடற்கரையோரப் பகுதியில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அந்நாட்டில் வாங்கூவர் தீவில் கனடா நேரப்படி திங்களன்று காலை 10.39 மணிக்கு முதலில் 6.6 என்ற ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இதைத் தொடர்ந்து, அரை மணி நேரத்துக்குள் இரண்டாவது முறையாக 6.8 ரிக்டர் அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 122 கிலோ மீட்டர் தூரத்தில் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்டது. பின்னர் 6.5 மற்றும் 4.9 என்ற ரிக்டர் அளவுக்கும் வாங்கூவரின் வெவ்வேறு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து நான்கு இடங்களில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டபோதும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. நிலநடுக்கங்களால் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
DINASUVADU