திருவண்ணாமலையில் மலையேற 2000 பேர்களுக்கு மட்டுமே அனுமதி….!ஆட்சியர் தகவல்…!!
தமிழ்நாட்டில் அமைந்துள்ள திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் அமைந்துள்ளது. இது சிவாத்தலங்களில் ஒன்றாகவும் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும் விளங்குகிறது.
திருவண்ணாமலை ரகசியமாக சொல்லப்படுவது பிரம்மாவும், திருமாலும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று சண்டையிட்டனர் அப்போது சிவபெருமான் அக்னி தூணாக நின்ற நிலையில் அவருடைய அடியைத் தேடி திருமால் வராக அவதாரம் எடுத்துப் பூமியைக் குடைந்துச் சென்றார்.
மூம்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மா சிவபெருமானின் முடியைத் தேடி அன்ன வாகனத்தில் பறந்து சென்றார். இவர்கள் இருவராலும் சிவபெருமானின் அடிமுடியைக் காண முடியவில்லை என்பது இத்தலத்தின் தலப் புராணமாகும்.
திருவண்ணாமலை சிவாலயத்தில் ஆண்டுக்கு நான்கு முறை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இவற்றுள் கார்த்திகை மாதத்தில் கொண்டாப்படுகின்ற பிரம்மோற்சவம் மிக சிறப்பு வாய்ந்தாகும்.
இந்தப் விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் பத்தாம் நாள் கார்த்திகை தீப திருநாளாகும். இச்சிவாலயத்தில் கார்த்தை தீப நாளான்று மகா தீபம் ஏற்றப்படுகிறது.
அந்த நாளில் திருவண்ணாமலை வந்து வழிபடுவதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். இந்த தீபமானது மலையின் உச்சியில் ஏற்றப்படுகிறது. இதனை மகா தீபம் என்று அழைக்கின்றனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருநாளில் மலையின் மீது ஏற 2000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த வருட கார்த்திகை தீபம் அடுத்த மாதம் நவம்பர் 23-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU