தூத்துக்குடி துப்பாக்கி சூடு : பலியானோர் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்களை விசாரிக்க முடிவு….!!!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார். இந்நிலையில்,இதுதொடர்பான வழக்குகளை சிபிசிஐடியில் இருந்து சிபிஐ – க்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்குகளை ஒரே வழக்காக பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை அதிகாரிகளான புலனாய்வு பிரிவு அதிகாரிகளான, எஸ்பி.சரவணன், டிஎஸ்பி ரவி ஆகியோர் கடந்த 13-ந் தேதி முதல் தூத்துக்குடியில் முகாமிட்டு பல தரப்பினரிடையே விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் துப்பாக்கி சூட்டில் பலியான, 13 பேரின் உடலையும் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்களிடமும் விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து இது சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.