அவதூறு பேச்சு …!உணர்ச்சி வசப்பட்டு பேசிவிட்டேன்…!உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் ஹெச்.ராஜா…!

Default Image

ஹெச்.ராஜா தனது பேச்சுக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
புதுகோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்திக்கு சென்ற ஹெச்.ராஜா அங்கே நின்ற காவல்துறையினரையும் , நீதிமன்றத்தையும் கடுமையாக திட்டனார்.அவர் நீதிமன்றத்தை மிக கொச்சையாகவும், தமிழக காவல்துறை முழுவதுமாக ஊழல் நிறைந்து விட்டதாகவும் மற்றும் காவல்துறை குறித்து கொச்சையான கருத்துகளையும் அவர் கூறினார்.அப்படி அவர் பேசும்போது மதவாதத்தை தூண்டும் சில வார்த்தைகளையும் பேசினார்.
இதனால் திருமயம் போலீசார் உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக எச். ராஜா உள்ளிட்ட 18 பேரின் மீது வழக்கு பதிவு செய்தனர்.அவர் மீது காவல்துறை சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரின் கடமையை செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரின் உத்தரவை மதிக்காமல் பேசுதல், பிற மதத்தினரை புண்படுத்தும் விதமாக பேசுதல், ஆபாசமாக பேசுதல் என பிரிவு (143 ,188 ,153 (A),290, 294 (b) 353 ,505 (1 )(b )(c ),506 (I)IPC) உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
ஏற்கனவே அதே நாளில் உயர்நீதிமன்றத்தை தரக்குறைவான வார்த்தைகளால் ஹெச்.ராஜா விமர்சித்ததாக வழக்கறிஞர்கள் சி.ராஜசேகர்,காங்கிரசை சார்ந்த சுதா,கனகராஜ் மற்றும் ராஜா முகமது உள்ளிட்டோர் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க முறையிட்டனர்.ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் இதை விசாரிக்க மறுத்து மனுவாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குலுவாடி ரமேஷ், கல்யாண சுந்தரம் அமர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் முறையிட்டவர்களை போலீசிடம் புகாரளிக்க நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளனர்.முகாந்திரம் இருந்தால் காவல்துறை நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தெரிவித்தனர்.
ஒரு அமர்வு மறுத்த நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் அமர்வு வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 25 ஆம் தேதி விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்தார்.தாமாக முன் வந்து விசாரிக்க கூடாது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் முறையிட்டுள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வு முன் ஹெச்.ராஜா தரப்பு முறையிட்டார்.
அதேபோல் சி.டி.செல்வம் அமர்வு தன்னை ஆஜராக உத்தரவிட அதிகாரம் இல்லை என்று முறையிட்டுள்ளார். மேலும் என் மீது சிடி செல்வம் அமர்வு சுவோமோட்டா வழக்குப் பதிவு செய்ய முடியாது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மட்டுமே சுவோமோட்டா வழக்குப் பதிவு செய்ய முடியும்.
இதற்கு உத்தரவு நகல்களை தாக்கல் செய்தால் ஆய்வு செய்யப்படும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வு பதில் அளித்தது.
இதன் பின்  பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு உயர்நீதிமன்றம், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.அக்டோபர்  22 -ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர்  அவதூறாக பேசிய வழக்கில் சென்னை வடபழனியில் உள்ள ஹெச்.ராஜாவின் வீடு பூட்டியிருப்பதாக நோட்டீஸ் திரும்பி வந்தது.
இன்று  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஆஜராகி விளக்கம் அளித்தார்  பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா.இதன் பின்னர்  ஹெச்.ராஜா தனது பேச்சுக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.தவறுதலாக சில வார்த்தைகளை கூறிவிட்டேன்.கோபம் ,உணர்ச்சிவசப்பட்டு பேசியது தவறு என்று உணர்ந்தேன் என்று  விளக்கம் அளித்துள்ளார்.இதனால் அவர் மீதான  வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்