தீவிர சிகிச்சையில் அன்பழகன்………..விரைந்தார் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின்…..!!!
திமுக பொதுசெயலாளர் கே.அன்பழகன் இன்று காலை வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலை உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியகியது.
இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்த சென்னை கிரீம்ஸ் சாலை உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விரைந்தார் இந்நிலையில் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேராசிரியர் க.அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்துள்ளது.சில நாட்கள் தங்கி ஓய்வு எடுக்க வேண்டி உள்ளதால் அவரை சந்திக்க தொண்டர்கள் யாரும் வரவேண்டாம் என்று தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
DINASUVADU