சூப்பர் ஸ்டார் , சூப்பர் ஸ்டார் தான்….ஜப்பானில் ஆயுத பூஜை கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்…..!!
ஜப்பானில் நடிகர் ரஜினி ரசிகர்கள் ஆயுத பூஜை கொண்டாடிய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கல்வி கலைகளில் சிறந்து விளங்க சரஸ்வதி பூஜையும், தொழிலுக்கு உதவி செய்யும் ஆயுதங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை வணங்கும் நாளாக ஆயுத பூஜையும் கொண்டாடப்படுகிறது.
ஆயுத பூஜை கொண்டாட்டம் என்றாலே தமிழகத்தின் பெரும்பாலான ஆட்டோ ஸ்டாண்டுகளில் பாட்ஷா படத்தில் வரும் “நான் ஆட்டோக்காரான்” என தொடங்கக்கூடிய ரஜினியின் பாடல் இடம்பெறாமல் இருக்காது.
அந்த அளவிற்கு ஆட்டோ ஓட்டுநர்களால் கடந்த 25 வருடங்களாக அப்பாடல் கொண்டாடப்பட்டு வருகிறது.
இது சென்னை இல்ல ஜப்பான்
இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்! #Thalaivar #Superstar #Rajinikanth #Japan #Fan #RBSI @rajinikanth @karthiksubbaraj @anirudhofficial @sunpictures @RIAZtheboss pic.twitter.com/0cjCPHMa73
— RBSI RAJINI FAN PAGE (@RBSIRAJINI) October 18, 2018
இந்நிலையில், ஜப்பானில் உள்ள ரஜினி ரசிகர்கள், தங்களின் ஆட்டோவிற்கு பூஜை செய்து, ஆயுத பூஜையை கொண்டாடியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
DINASUVADU