காலாவதியான கருணாநிதியின் கட்சி…ஆர்.பி உதயகுமார் சாடல்..!!
கருணாநிதியின் கட்சி காலாவதியான கட்சி என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ‘இந்த இயக்கத்தை எத்தனையோ பேர் வீர வசனம் பேசி அழிப்போம் என்று கூறினார்கள் ஆனால் அவர்கள்தான் காணாமல் போய் உள்ளனர். மதுரையில் அமைச்சராகவும், முன்னாள் முதலமைச்சரின் மகனான அழகிரியும் இதே மதுரையில் அதிமுகவை அழிப்போம் என்று கூறினார். ஆனால் தற்போது அவரைத் தேடும் நிலை தான் உள்ளது’ என்று கூறியுள்ளார்.
‘நீதிமன்ற உத்தரவின் படி மெரினாவில் கருணாநிதியின் சமாதி அமைப்பதற்கு, இன்னும் முதலமைச்சர் கையெழுத்து இடவில்லை, வருவாய்த்துறை அமைச்சர் என்ற முறையில் நானும் செய்தித்துறை அமைச்சர் மட்டுமே கையெழுத்திட்டு அந்தப் பாவத்தை செய்துள்ளோம். திமுகவில் முன்னணி தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லையா அவர்கள் எல்லாம் ராஜினமா செய்துள்ளார்களா? ஊழலின் ஊற்றுக்கண்ணாக திமுக திகழ்கின்றது என்று முதல்வரே கூறியுள்ளார். கருணாநிதியின் கட்சி காலாவதியான கட்சி. நன்றாகச் செயல்படுகின்ற இந்த அரசை நீதிமன்றம் மூலம் முடக்கப் பார்க்கிறார்கள்’ என்று விமர்சித்துள்ளார்.
DINASUVADU