MeToo_வில் விமல்..முக்கியமான இடத்துல மச்சம்…‘காட்டு பங்களாவில் என்ன வச்சி..‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’டிரைலர்…!!
மீ டூ விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், நடிகர் விமல் தனக்கு நேர்ந்த மீ டூ அனுபவம் குறித்து பேசியுள்ள டிரைலர் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் விமல் மற்றும் ஆஷ்னா ஸவேரி ஜோடி சேர்ந்து நடித்து வரும் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தில், ‘ஹரஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்களை மிஞ்சும் அளவிற்கு அடல்ட் காமெடி காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.
அடல்ட் காமெடியை அள்ளி தெளிக்கும் வகையில் இருக்கும் இப்படத்தின் டிரைலரில், தற்போதைய ஹாட் டாப்பிக்கான மீ டூ குறித்தும், ஸ்ரீலீக்ஸ் சர்ச்சை குறித்தும் நக்கலடித்துள்ளனர்.
‘அந்த காஞ்சனா காட்டு பங்களாவுக்கு கூட்டிட்டு போய் என்ன என்னா பாடுபடுத்தினா தெரியுமா? உங்களுக்கு மட்டும் தான் மீ டூ-வா… எனக்கும் தான் மீ டூ’ என விமல் கூறுவது போல் டிரைலர் தொடங்குகிறது. இரட்டை அர்த்தமுள்ள வசனங்கள் அதிகம் உள்ள இந்த டிரைலரில், ‘ஸ்ரீரெட்டி வேண்டாம்னே.. அவ பேட்டி குடுத்துடுவா.. சன்னி லியோன் ஓகே’ என சகட்டுமேனிக்கு கலாய்த்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் சமீப காலமாக அடல்ட் காமெடி திரைப்படங்கள் ரிலீசாகி எக்குத்தப்பான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக வெற்றிபெறுகிறது. அதே யுக்தியை பயன்படுத்தி விமலின் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ திரைப்படமும் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் விமலுக்கு கைக்கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
DINASUVADU