எப்போ வேணாலும் இடியும் நிலையில் பள்ளி…………பயத்துடன் பள்ளி செல்லும் குழந்தைகள்………அகற்ற பொதுமக்கள் கோரிக்கை…!!!
எப்போதும் வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் பள்ளிக்கட்டிடத்தை அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி அருகே எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடத்தை அகற்ற வேண்டுமென அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரியை அடுத்த தருமாபுரி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நிலையில் ஆண்டுகள் மேலாகியுள்ள இப்பள்ளியில் கட்டிடங்கள் மிகவும் சேதமடைந்து காணப்படுகின்றன.
இந்நிலையில் எப்போதும் வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்களால் மாணவ, மாணவிகள் அச்சத்துடனே பள்ளிக்கு வந்து செல்கின்றனர். அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் பழைய பள்ளிக்கட்டிடத்தை அரசு அகற்றிவிட்டு புதிய கட்டிடம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
DINASUVADU