மண் சரிவால் முடங்கிய தேசிய நெடுஞ்சாலை………வரிசையில் நிற்கும் வாகனங்கள்…!!!
ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பலத்த மண்சரிவு காரணமாக தடை ஏற்பட்டுள்ளது.
ஜம்மு – ஸ்ரீநகர் சுமார் 270 கிலோமீட்டர் தூரமுள்ள தேசிய நெடுஞ்சாலையில் ராம்பன் மாவட்டத்தில் உள்ள ராம்சூ நகரில் மண்சரிவு காரணமாக சாலை மூடப்பட்டது. மண்சரிவு ஏற்பட்ட நிலையிலும் நேரத்தில் அதிர்ஷ்டவசமாக வாகனங்கள் ஏதும் இல்லாததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில் மண்சரிவு காரணமாக சாலையில் இருந்து வெளியேற முடியாமல் பல்வேறு வாகனங்கள் சிக்கியுள்ளன. சாலைத் தடையை அகற்ற மீட்பு நிறுவனங்கள் களமிறங்கியுள்ள நிலையில் போக்குவரத்து சீரடைய பல மணி நேரம் ஆகக் கூடும் என்று கூறப்படுகிறது.
DINASUVADU