கர்ப்பிணி பெண்களின் நலன் காக்கும் சுரைக்காய்….!!!
கர்ப்பிணி பெண்களுக்கு கர்பகாலங்களில் பல உடல் நலக்கேடுகள் ஏற்படுகிறது. இதில் இருந்து நலம் அளிக்க கூடிய ஒரு காய்கறியாக சுரைக்காய் கருதப்படுகிறது.
பெண்களுக்கு கர்ப்பமாக இருக்கும்போது உப்பு நீர் அதிகமாகி கால்கள் வீக்கமாகும். அப்போது தாராளமாக சுரைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள கால் வீக்கம் வடியும். சிறுநீரகத்தை நன்கு இயக்க வைக்கும் ஆற்றல் கொண்டது சுரைக்காய். பித்த கோளாறையும் குணமாக்கும்.