காலமானார் காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரி…!

Default Image

காங்கிரஸ் மூத்த தலைவரும் உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் முன்னாள் முதல்வருமான என்.டி.திவாரி உடல்நலக்குறைவால் காலமானார்.
இவர்  1925 அக்டோபர் 18 ஆம் தேதி பிறந்தார்.இவருக்கு வயது 93 ஆகும்.இவர் உத்தரப்பிரதேசத்தில்  1984 – 85,1988 – 89 ஆண்டுகளில்,2002 முதல் 2007 வரை உத்தரகாண்ட்டிலும் முதல்வராக பதவி வகித்தார். அதேபோல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.1963 லஆம் ஆண்டு  காங்கிரசில் இணைந்தார் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் 1986 -87 ஆண்டு வரை  வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றியவர் .அதேபோல் ஆந்திராவிலும் 2007 – 2009 ஆண்டு வரை  ஆளுநர் பதவியிலிருந்தார் .இவர் சீறுநீரகத் தொற்று ஏற்பட்டதையடுத்து  டில்லி ஷாகேட் பகுதியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அதேபோல் என்.டி.திவாரி பிறந்த தினமான அக்டோபர் 18ஆம் தேதியிலேயே காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்