சபரிமலை பிரச்னைக்கு ஆர்.எஸ்.எஸ், சங் பரிவார் அமைப்புகள்தான் முக்கிய காரணம் …!கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

Default Image

பிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளா மாநில சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு இந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்கள் சங்கமும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழகம், கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
சபரிமலை கோயிலில் பெண்களுக்கு அனுமதி என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் மீண்டும் போராட்டங்கள் நடைபெறுவதால் அங்கு தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுவருகிறது.இந்நிலையில் இன்று கோயில் நடைதிறக்கும் நிலையில்,கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டனர்.அதேபோல் ஏராளமானபெண் போலீஸாரும் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.
Image result for சபரிமலை
ஆனால் கேரளாவில் சபரிமலை கோவிலுக்குள் நுழைய முயன்ற பெண்களையும் வர விடாமல் போராட்டகாரர்கள் தடுத்தார்கள்.
அது மட்டும் அல்லாமல் சபரிமலையில் அருகே செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளரின் காரை மறித்து போராட்டக்காரர்கள் வன்முறை தாக்குதல் நடத்தினார்கள்.இன்றும் சபரிமலை பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.அவரது பதிவில், சபரிமலை பிரச்னைக்கு ஆர்.எஸ்.எஸ், சங் பரிவார் போன்ற அமைப்புகளே முக்கிய காரணம் ஆகும். பிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை என்று  ட்வீட் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்