திடீர் பதற்றம் …!சபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்ற பெண் தடுத்து நிறுத்தம் …!
கேரள மாநிலம் ஆலபுழாவில் இருந்து சபரிமலை கோயிலுக்கு தரிசனத்திற்கு சென்ற லிபி என்ற பெண், பத்தனம்திட்டாவில் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இந்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு இந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்கள் சங்கமும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழகம், கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
சபரிமலை கோயிலில் பெண்களுக்கு அனுமதி என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் மீண்டும் போராட்டங்கள் நடைபெறுவதால் அங்கு தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுவருகிறது.இந்நிலையில் இன்று கோயில் நடைதிறக்கும் நிலையில்,கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டனர்.அதேபோல் ஏராளமானபெண் போலீஸாரும் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கேரள மாநிலம் ஆலபுழாவில் இருந்து சபரிமலை கோயிலுக்கு தரிசனத்திற்கு சென்ற லிபி என்ற பெண், பத்தனம்திட்டாவில் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.இதனால் பாதுகாப்புக்காக அப்பெண் பத்தனம்திட்டா காவல் நிலையம் அழைத்துச்செல்லப்பட்டார்.