தமிழகம் முழுவதும் கேன் வாட்டர் உற்பத்தி நிறுத்தம் …!தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக வணிக வளாகம் மூடல் ..!
தமிழகம் முழுவதும் கேன் வாட்டர் உற்பத்தி நேற்று மாலை முதல் நிறுத்தப்படுவதாக உற்பத்தியாளர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப்பட போராட்டத்தில் ஈடுபட்டுள்னர்.இதனால் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கேன் வாட்டர் உற்பத்தி நேற்று மாலை முதல் நிறுத்தப்படுவதாக உற்பத்தியாளர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். நிலத்தடி நீரை எடுக்க விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை எதிர்த்து முடிவு செய்தனர்.
இந்நிலையில் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக், கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அதேபோல் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாகவே வணிக வளாகம் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. பராமரிப்புப் பணிக்காக இன்று மூடப்படுவதாக ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.