2017_இல் இந்தியாவை வென்ற பாகிஸ்தான்: "யுவராஜ் , கோலி சிரிப்பு" போட்டுடைத்த மாலிக்..!!

Default Image
இங்கிலாந்தில் 2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது, ஆனாலும் போட்டி முடிந்த பிறகு யுவராஜ் சிங், கேப்டன் கோலி, பாகிஸ்தான் வீரர் ஷோயப் மாலிக், அசார் மஹ்மூத் எதையோ பேசிப் பேசி சிரித்து மகிழ்ந்தனர்.Image result for MALIK KOLI YUVARAJஅது என்ன என்பதைத் தற்போது ஷோயப் மாலிக் வாய்ஸ் ஆஃப் கிரிக்கெட் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
ஐசிசி தனது டிவிட்டர் கணக்கில் #ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் என்ற ஹேஷ்டேக்கில் இதன் வீடியோவை வெளியிட்டுள்ளது, அதில் ஷோயப் மாலிக், இந்திய வீரர்கள் யுவராஜ் சிங், கோலி, ஆகியோருடன் எதையோ பகிர்ந்து கொண்டு சிரித்து மகிழ்ந்த காட்சி இடம்பெற்றுள்ளது.தோல்வியடைந்த பிறகு எதை நினைத்து அப்படி இரு அணி வீரர்களும் சிரித்தனர் என்ற ஆர்வத்தை முடித்து வைக்கும் விதமாக ஷோயப் மாலிக் கூறியதாவது:
                       மே.இ.தீவுகளுக்கு எதிரான போட்டியில் கெய்ல் எங்கள் பந்து வீச்சை அடித்துக் கொண்டிருந்தார். அப்போது கெய்லுக்கு கேட்ச் விடப்பட்டது. நல்ல பொசிஷனில் சயீத் அஜ்மல் கேட்ச் எடுக்கும் நிலையில் கடைசி நொடியில் பந்திலிருந்து விலகினார். நான் அப்போது அஜ்மலிடம் கேட்டேன், ஏன் கேட்ச் எடுக்கக் கூடிய நிலையில் திடீரென விலகினாய் என்று.. அதற்கு அவர், நான் கேட்சை விட்டால் பிடிக்கலாம் என்று குனிந்தபடி காத்திருந்ததாகத் தெரிவித்தார்.கெய்லுக்கு கேட்ச் விட்ட இந்தச் சம்பவத்தைத்தான் இந்திய வீரர்கள் கோலி, யுவராஜ் சிங் ஆகியோருடன் அளவாளவி சிரித்துக் கொண்டிருதோம்.இவ்வாறு வாய்ஸ் ஆஃப் கிரிக்கெட்டில் ஷோயப் மாலிக் தெரிவித்தார்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்