டி.வி.எஸ். தீ வைத்து உரிமையாளர் எதிர்ப்பு…!!
சென்னையில் புதிதாக வாங்கிய இருசக்கர வாகனம் பழுதடைந்து கொண்டே இருந்த ஆத்திரத்தில், அதன் உரிமையாளர் டி.வி.எஸ். ஷோரூம் அருகிலேயே தீ வைத்து கொளுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் அயனாவரத்தைச் சேர்ந்த போட்டோ ஸ்டுடியோ உரிமையாளரான கோபிநாத் என்வர் தான் இந்த ஆத்திரக்காரர் இவர் அங்குள்ள எஸ்.பி.எம். டிவிஎஸ் ஷோரூம் கடந்த ஜனவரி மாதம் வாங்கப்பட்ட அந்த டி.வி.எஸ். விக்டர் வாகனம் தொடர்ந்து பழுதடைந்ததாகவும், அதுகுறித்து புகார் அளித்தும் முறையாக பழுதுநீக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். இந்த அதிருப்தியின் காரணமாகவே இவ்வாறு தீவைத்ததாக கோபிநாத் கூறினார்.
அங்குள்ள எஸ்.பி.எம். டிவிஎஸ் ஷோரூம் முன் தனது டி.வி.எஸ். விக்டர் வாகனத்தை நிறுத்தினார். தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த வாகனத்தை கற்களால் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்.
பிறகு அனைவரும் இருசக்கர வாகனத்தை தூக்கிச் சென்று சாலையோரம் போட்டு விட்டு பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததுள்ளார்.இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
DINASUVADU