"பிஜேபியின் ரெட்டை வேடம்" BJP_யின் முகத்தை கிழித்தெறிந்த ஆங்கில பத்திரிகை..!!
பெண்கள் சபரிமலை செல்வதற்கு எதிராக கேரளத்தில் போராட்டம் நடத்தி வரும் பாஜக, தெலுங்கானாவில் விருப்பமுள்ள பெண்கள் அனைவரையும் இலவசமாக சபரிமலைக்கு அழைத்துச் செல்வோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்து வருவது தெரியவந்துள்ளது.
அதிகாரத்துக்கு வந்தால் அனைத்து பக்தர்களுக்கும் இலவச சபரிமலை பயணத்திற்கு ஏற்பாடு செய்வதாக தெலுங்கானா மாநில தேர்தல் அறிக்கையில் பாஜக தெரிவித்துள்ளது. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலைவர் என்.வி.எஸ்.எஸ். பிரபாகர் மூலம், இந்த தகவலை உறுதி செய்துள்ள ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு, பெண்கள் சபரிமலை செல்வதை அரசியல் ஆதாயத்துக்காக கேரளத்தில் பாஜக எதிர்த்து வருகிறது. ஆனால், அதற்கு நேர்மாறான நிலைப்பாட்டை தெலுங்கானாவில் தேர்தல் ஆதாயத்திற்காக பாஜக மேற்கொண்டுள்ளது என்று விமர்சித்துள்ளது.அனைத்துப் பெண்களும் வயது வித்தியாசம் இல்லாமல் சபரிமலையில் தரிசனம் செய்ய அனுமதி அளித்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பின் பின்னணியிலேயே இந்த வாக்குறுதியை பாஜக தலைமை அளித்துள்ளது. பத்துக்கும் ஐம்பதுக்கும் இடைப்பட்ட வயதுள்ள பெண்களை இலவச பயணத்திலிருந்து விலக்கி வைப்பதாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை. சபரிமலைக்கு செல்ல விரும்பும் அனைவருக்கும் இலவச பயணத்துக்கான ஏற்பாடு செய்யப்படும் என்றே பாஜக தலைமை குறிப்பிட்டுள்ளது.
இதன்மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற எதை வேண்டுமானாலும் கூறலாம் என்ற பாஜக-வின் இரட்டை வேடம் கலைந்துள்ளது.பாஜக ஆட்சிக்கு வந்தால், கறுப்புப் பணத்தை மீட்டு, அனைவரது வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சத்தை செலுத்துவோம் என்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜக கூறியது. அது மக்களை ஏமாற்றுவதற்கு அளித்த வாக்குறுதி மட்டுமே என்பதை அண்மையில் அக்கட்சியின் முன்னாள் தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி வெட்கமே இல்லாமல் ஒப்புக்கொண்டார். அதன் தொடர்ச்சியாகவே சபரிமலை ஐயப்பன் விஷயத்திலும் மக்களை ஏமாற்றும் முயற்சியை பாஜக கையில் எடுத்துள்ளது.
DINASUVADU