கேரளாவில் பதற்றம் : பேச்சுவார்த்தை தோல்வி , விஸ்வரூபம் எடுக்கும் போராட்டம்..!!
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. பேச்சுவார்த்தையில் திருப்தி இல்லை என பந்தளம் மன்னர் குடும்பத்தினர் அறிவிப்பு.
கடந்த மாதம் உச்சநீதிமன்றம் சபரிமலை கோவிலுக்கும் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியது .இதனை தொடர்ந்து அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கூடாது என்று தென் இந்தியாவில் குறிப்பாக கேரளாவில் இந்து அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர இன்று கேரள தேவசம் போர்டு சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.இந்த ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரம் பகுதியில் உள்ள அறநிலைத்துறை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பந்தள மன்னர் பரம்பரையை சார்ந்தவபர்களும் , தந்திருக்களும் , அறநிலைத்துறை அதிகாரிகளும் ஆலோசனை பங்கேற்றனர். தொடர்ந்து காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் தற்போது முடிவடைந்ததை தொடர்ந்து பந்தள மன்னர் பரம்பரையை சேர்ந்த சசிகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறும் போது காலையில் இருந்து நடைபெற்ற அசோசனை கூட்டத்தில் அறநிலைத்துறை எங்களின் கோரிக்கைகளை அங்கீகரிக்கவில்லை , எங்களின் கோரிக்கைகளை பரிசீலிப்போம் என்றும் கூறி பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க முயற்சி செய்ய வேண்டி எல்லா நடவடிக்கைகளையும் அறநிலைத்துறை செய்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.இதனால் பேச்சுவார்த்தை தற்போது தோல்வியில் முடிந்துள்ளது.இதனால் கேரளாவில் பதட்டம் நீடித்து வருகிறது.இன்று காலை கேரளமுதல்வர் சபரிமலை கோவில் தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்துவோம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU