ஐயப்பன் கோவில் வர கூடாது : வீட்டுக்கே சென்று மிரட்டல் , மிரளும் பெண் பக்தர்கள்..!!
அனைத்து வயது பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபட அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் அனுமதியை தொடர்ந்து, வருகிற நவம்பர் 17-ந்தேதி தொடங்க இருக்கும் மண்டல பூஜையையொட்டி சபரிமலை கோவிலுக்கு செல்வதற்காக கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிஷாந்த் என்ற வங்கி ஊழியரின் மனைவி ரேஷ்மா நிஷாந்த் (வயது 32) என்பவர், மாலை அணிந்து 41 நாள் விரதத்தை தொடங்கி உள்ளார். இந்த தகவலை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள ரேஷ்மா, தன்னுடன் மேலும் சில இளம்பெண்கள் சபரிமலைக்கு வர இருப்பதாகவும் அதில் தெரிவித்து உள்ளார்.
இதைத்தொடர்ந்து, சமூக ஊடகங்கள் மூலம் தனக்கு மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும், ஒரு கும்பல் தனது வீட்டுக்கு வந்து சபரிமலைக்கு செல்ல விடமாட்டோம் என்று நேரடியாக மிரட்டிவிட்டு சென்றதாகவும் கூறிய ரேஷ்மா, அரசும் போலீசும் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளார்.
இதேபோல் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிந்து என்ற பெண்ணும், மண்டலபூஜையையொட்டி 30 பெண்களுடன் சபரிமலை கோவிலுக்கு செல்ல இருப்பதாக இன்று தெரிவித்தார்.
DINASUVADU