புழல் சிறையில் தொடரும் மர்மம்…….புழலிலே ஆய்வாளரை தீர்த்து கட்டும் கைதி….சதியை அம்பலப்படுத்திய உளவுத்துறை…….புரியாத புதிராக புழல்……!!!

Default Image
புழல் சிறையின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய போலீஸ் பக்ருதீன் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை அறிக்கை சமர்பித்துள்ளது.
இந்நிலையில் கைதிகளுக்கு முறைகேடாக வசதிகள் செய்யப்பட்ட விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த புழல் சிறையின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய போலீஸ் பக்ருதீன் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை அறிக்கை சமர்பித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு புழல் சிறையில் உயர்பாதுகாப்புப் பிரிவில் அடைக்கப்பட்டிருந்த தண்டனைக் கைதிகளில் சிலர், சொகுசு வாழ்க்கை வாழ்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Image result for puzhal jail
இதனைத் தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் 6 முறை நடந்த சோதனையில் 50-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகள், சுமார் 70 எப் எம் ரேடியோக்கள், சமையலுக்கு பயன்படுத்தப்படும் மின் சாதனப் பொருட்கள், 500 கிலோவுக்கும் அதிகமான பாஸ்மதி அரிசி, பருப்பு போன்றவை புழல் சிறையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Image result for கொலை
இந்நிலையில் தான் கைதிகளின் சொகுசு வாழ்க்கையை வெளிப்படுத்தியதால், புழல் சிறையின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஆய்வாளர் சுப்பையாவை, புழல் சிறையிலேயே வைத்து தீர்த்துக்கட்ட, கைதி போலீஸ் பக்ருதீன் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுப் பிரிவு அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மதத்தலைவர்கள் கொலை வழக்கில் புழல் சிறையில் உள்ள போலீஸ் பக்ருதீன் சட்ட விரோதமாக புழல் சிறையில் உணவகமே நடந்தி வந்ததை ஆய்வாளர் சுப்பையை கண்டுபிடித்து அம்பலப்படுத்தினார்.
இந்த நிலையில் தான் புழல் சிறை வளாகத்தில் உள்ள டிஐஜி முருகேசனின் குடியிருப்பில் உள்ள குதிரை லாயத்தில் காவல் ஆய்வாளர் சுப்பையா கடந்த மாதம் சோதனை மேற்கொண்டார். அப்போது அங்கு இரண்டு செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.
Related image
அந்த செல்போன்களை ஆய்வு செய்த போது டி.ஐ.ஜி முருகேசன் வீட்டு வேலைகளை பார்க்கச் செல்லும் கைதி ஐயப்பன் என்பவன் அந்த இரண்டு செல்போன்களையும் பதுக்கி வைத்திருந்ததை ஆய்வாளர் சுப்பையா கண்டுபிடித்து அம்பலப்படுத்தினர்.
மேலும் கைதி ஐயப்பனுடன் தனது ஓட்டுனர் ராமசாமி செல்போன் மூலம் தொடர்பில் இருந்ததுதும், தனது நடமாட்டம் உள்ளிட்ட தகவல்களை தெரிந்துகொண்ட ஐயப்பன், கைதி பக்ருதீனுக்குத் தெரிவித்ததையும் கண்டுபிடித்தார்.
Related image
அதுமட்டும் இன்றி சிறைக்குள் இருக்கும் போலீஸ் பக்ருதீனுக்கு ஆயுதங்களையும் வெளியில் இருந்து கொண்டு சென்று ஐயப்பன் கொடுத்ததையும் ஆய்வாளர் சுப்பையா மேலிடத்திற்கு கொண்டு சென்றார்.
இந்த நிலையில் உளவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் கொலை சதிகுறித்து தலைமையகத்திற்கு அறிக்கை சமர்பித்துள்ளனர். போலீஸ் பக்ருதீனுக்குப் பின்னணியில் முறைகேடு வசதிகளுக்கு அனுமதித்த வேறு சில அதிகாரிளும் இருக்கலாம் என்பதால் அதுகுறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
Related image
தொடர்ந்து புழல் சிறை ஒரு மர்ம சிறையாகவே மாறுவருகிறது காவலையே தீர்த்து கட்ட துடிக்கும் கைதி,கைதிகளின் சொகுசுவாழ்க்கை,ஆயுத பரிமாற்றம்,என அடுக்கடுக்கு குற்றச்சாட்டு,அதிகாரிக்கே எந்த நிலைமை அதுவும் சிறைக்குள் என்றால் நாட்டு மக்களுக்கு இந்த கைதியால் என்ன நிகழுமோ என்று நினைத்தால் பதறவைக்கிறது.மர்மத்தின் மர்மாக புழல் புரியாத புதிர்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்