வெடித்த சபரிமலை சர்ச்சை……….மூவர்_கொண்ட பிரதிநிதிகளுடன் நாளை முக்கிய அலோசணை……..தீவிர காட்டும் தேவசம்…..!!!! யார் இந்த மூவர்…..???

Default Image
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக மூவர் கொண்ட பிரதிநிதிகளுடன் திருவிதாங்கூர் தேவசம் வாரியம் முக்கிய அலோசணை  நடத்திகிறது.
Image result for sabarimala devasthanam
கேரளா மாநில சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Image result for sabarimala devasthanam

இந்நிலையில் இந்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு  இந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்கள் சங்கமும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழகம், கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.இந்த பேரணியில் பெண்களே முன்நின்று நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Image result for sabarimala devasthanam
மேலும் இன்று கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டுப் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தான், பந்தளம் அரச குடும்பம், சபரிமலை கோவில் பூசாரிகள் மற்றும் இந்து அமைப்புகள்  நாளை பெண்களை சபரிமலையில் அனுமதிப்பது தொடர்பாக பேச்சு நடத்த வருமாறு ஐயப்பன் கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவசம் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
Image result for hinduism flag
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள இந்த திருவிதாங்கூர் தேவசம் வாரிய அலுவலகத்தில் நாளை இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் ஐயப்ப சேவா சங்கம், ஐயப்ப சேவா சமாஜம், தந்திரி மகாமண்டலம் உள்ளிட்ட அமைப்புகளும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளன. இதில், அனைத்துத் தரப்பிடமும் கருத்துக் கேட்கப்பட்டு, அதற்கேற்ப பொருத்தமான முடிவு எடுக்கப்படும் என்று தேவசம் வாரிய தலைவர் பத்மகுமார் கூறியுள்ளார்.மேலும் இந்த தீர்ப்பு மக்களிடையே எதிர்மறையான விமர்சனத்தையும் பெற்று வருவதோடு மட்டுமல்லாமல் பலத்த எதிர்ப்பையும் மக்களிடையே கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்