சர்சையில் சிக்கிய இலங்கை அணியின் முன்னாள் கேப்டன்…!2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு …!ஐசிசி அதிரடி
ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா மீது 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
சனத் ஜெயசூர்யா இவர் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஆவார்.
சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதும் இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக இருந்தார்.2013 முதல் 2015 வரையும், அதன்பின் 2017-ல் ராஜினாமா செய்யும் வரையிலும் இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் பதவியில் இருந்தார்.
1996-ம் ஆண்டும் இலங்கை அணி உலகக்கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார் சனத் ஜெயசூர்யா.
இந்நிலையில் ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா மீது 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது.இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக இருந்த ஜெயசூர்யா, ஊழல் தடுப்பு விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை மற்றும் சூதாட்டம் தொடர்பான ஆவணங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவு.