டெஸ்ட் தொடரில் கலக்கிய பிரிதிவி ஷா,ரிசத் பண்ட் மற்றும் உமேஷ்…!ஐசிசி டெஸ்ட் தரவரிசையிலும் முன்னேற்றம் …!
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரில் சிறப்பாக விளையாடிய பிரிதிவி ஷா,ரிசத் பண்ட் மற்றும் உமேஷ் ஆகியோர் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் வெள்ளிக்கிழமை(அக்டோபர் 13 ஆம் தேதி) தொடங்கியது.இந்த போட்டியிலும் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இதனால் இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர் பிரிதிவி ஷாவிற்கு தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டது. அதேபோல் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய உமேஷ் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
இந்நிலையில் இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய பிரிதிவி ஷா,ரிசத் பண்ட் மற்றும் உமேஷ் ஆகியோர் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.இளம் வீரரான பிரிதிவி ஷா 60-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.அதேபோல் மற்றொரு இளம் வீரர் ரிசத் பண்ட் 62-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் 29-வது இடத்தில் இருந்து 25-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்