சர்கார் படத்தலைப்பு வைத்துள்ளவர்களுக்கே மக்களுக்கு நல்லது செய்ய இவ்வளவு ஆர்வம் என்றால் எங்களுக்கு எவ்வளவு இருக்கும்…! தமிழக பாஜக தலைவர் தமிழிசை அதிரடி
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சர்கார் படம் குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில் கற்பனை கேள்விகளை தொகுப்பாளரான நடிகர் பிரசன்னா கேட்டார் .அதற்கு பதில் அளித்த நடிகர் விஜய்,சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை, நிஜத்தில் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன்.மாநிலத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை.மேலிருக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் நல்லவர்களாக இருந்தால், மாநிலம் தானாகவே நல்லதாக இருக்கும்.நான் முதல்வரானால் ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுப்பேன் ; ஆனால் முடியுமா என தெரியவில்லை.நெருக்கடி ஏற்பட்டால் இயற்கையாக நல்ல தலைவர்கள் உருவாவார்கள். அவர்கள் அமைப்பார்கள் நல்ல சர்க்கார் என்று அதிரடியாக பேசினார்.இந்நிலையில் விஜய்யின் இந்த பேச்சு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சர்கார் படம் குறித்து சென்னையில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,சர்கார் என படத்தலைப்பு வைத்துள்ளவர்களுக்கே மக்களுக்கு நல்லது செய்ய இவ்வளவு ஆர்வம் என்றால், சர்காராக இருக்கும் எங்களுக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கும் .அதேபோல் அவர்கள் வந்தவுடன் நான் பதில் கூறுகிறேன் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.