வைரமுத்து -சின்மயி விவகாரம் ..!பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா…!சீமான் சந்தேகம்

Default Image

வைரமுத்து விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
13 வருடங்களுக்கு முன்பு ஸ்விசர்லாந்தில் ஈழத்தமிழர்களுக்காக நடைபெற்ற ‘வீழமாட்டோம் ‘ என்ற விழாவிற்கு சென்றிருந்தோம். விழா நிறைவு பெற்றதும் சின்மயி வைரமுத்து அறைக்கு சென்று அவரை பார்க்க அழைத்துள்ளனர்.

ஒத்துழைக்காவிட்டால் சினிமாவில் உங்களது கேரியர் இருக்காது என்று கூறியுள்ளனர்.கோபம் அடைந்த சின்மயி அப்படிப்பட்ட கேரியர் தேவை இல்லை என்று வந்துவிட்டாராம்.வைரமுத்து பற்றி இவர் தெரிவித்த கருத்து தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
Image result for வைரமுத்து
தன் மீதான பாலியம் புகார் குறித்து வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டில், ‘அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.’ என தெரிவித்தார்.வைரமுத்துவின் பதிவிற்கு ‘பொய்யன்’ என சின்மயி பதிலளித்தார்.
Image result for வைரமுத்து
இதேபோல் சமூக வலைதளமான பேஸ்புக் மூலமாக சின்மயி, சிறுவயதில் ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் துன்புறுத்தல் நடந்திருக்கிறது.metoo மூலம் தற்போது ஆண்களும் தாங்கள் சந்தித்த பிரச்னைகளை கூற தொடங்கியுள்ளனர் .அதேபோல் வைரமுத்து தவறாக நடந்துகொண்டார் என கூறுவதற்கு சக பாடகிகள் பலருக்கு தயக்கம் உள்ளது .வைரமுத்து மீது நான் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை .என் திருமணத்திற்கு தொடர்பாளர்கள் மூலம்தான் வைரமுத்துவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது.பாலியல் துன்புறுத்தல் செய்தவர்கள்தான் வெட்கப்பட வேண்டும். நான் வெட்கப்பட மாட்டேன் என்றும் சின்மயி தெரிவித்தார்.
Image result for வைரமுத்து

பாடகி சின்மயி பாலியல்குற்றச்சாட்டு தொடர்பாக கவிஞர் வைரமுத்து வீடியோ பதிவுமூலம் விளக்கம் அளித்தார்.அவர் கூறுகையில், பாடகி சின்மயி குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய்யானது.வழக்கு தொடுத்தால் சந்திக்க தயாராக உள்ளேன். சின்மயி புகார் பொய்யானது என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரங்களை தொகுத்து திரட்டி வைத்திருக்கிறேன் என்றும் கவிஞர் வைரமுத்து வீடியோ பதிவுமூலம் விளக்கம் அளித்தார்.
Image result for சீமான்
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,எல்லா கற்களும் வைரமுத்துவை நோக்கியே திரும்புவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.அதேபோல் வைரமுத்து தமிழ் இனத்தின் அடையாளம்.வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்