திமுகவில் மாற்றம் கொண்டு வர நேரம் வந்துவிட்டது…!எப்படி தாக்க வேண்டும் என சொல்கிறேன் காத்திருங்கள்…!மு.க.அழகிரி தொண்டர்களுக்கு கட்டளை
தேர்தல் வரும்போது எப்படி தாக்க வேண்டும் என சொல்கிறேன் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பிறகு திமுகவில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.பொருளாளராக துரைமுருகனும்,முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆனால் மு.க.அழகிரி கட்சியில் தனக்கும் பதவி கிடைக்கும் என்று எண்ணினார்.ஆனால் அவருக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை.இதன் வெளிப்பாடாக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தார்.அதேபோல் செப்டம்பர் 5 ஆம் தேதியும் பேரணி ஒன்றையும் அறிவித்தார்.அதில் 1 லட்சம் தொண்டர்களுக்கு கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.ஆனால் அவர் நினைத்தது போல் தொண்டர்கள் என்ணிக்கை இல்லை.இதன் பின்னரும் தனது பேட்டியை குறைத்து வந்தார்.அது மட்டும் அல்லாமல் கட்சியில் சேர்க்க வலியுறுத்தியும் ஒரு சில பேட்டிகளில் தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் மீண்டும் மு.க.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.திண்டுக்கல்லில் கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் மு.க.ஆழகிரி கூறுகையில், கருணாநிதியிடம் உழைப்பு, சுயமரியாதை கற்றுக் கொண்டேன்.திருமங்கலம் தொகுதியில் நான் எவ்வாறு உழைத்தேன் என உங்களுக்கு தெரியும்.பல சதிகளால் திமுகவில் இருந்து நான் வெளியேற்றப்பட்டேன்.”திமுகவில் மாற்றம் கொண்டு வர நேரம் வந்துவிட்டது. தேர்தல் வரும்போது எப்படி தாக்க வேண்டும் என சொல்கிறேன், காத்திருங்கள் என்று தொண்டர்களுக்கு மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.