மனித உருவில் இருக்கும் இறைவனுடன் சேர்ந்து இறைவனை வணங்கினேன் …!த்ரிஷா பெருமிதம்
மனித உருவில் இருக்கும் இறைவனுடன் சேர்ந்து இறைவனை வணங்கி வந்ததாக த்ரிஷா தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில், விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
ரஜினியை வைத்து, முள்ளும் மலரும் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய மகேந்திரன், விஜய்யின் தெறி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.சமீபத்ததில் மகேந்திரன் ரஜினியுடன் பேட்ட படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்திருந்தார்.
ரஜினியுடன் த்ரிஷாவும் இணைந்து கோயிலுக்கு சென்றுள்ளார்.ரஜினியுடன் கோயிலுக்கு சென்று வந்ததை, மனித உருவில் இருக்கும் இறைவனுடன் சேர்ந்து இறைவனை வணங்கி வந்ததாக த்ரிஷா தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
https://twitter.com/trishtrashers/status/1050987201738227713