சமூக வலைதளங்கள் மூலம் நிகழும் #MeToo…! எல்லாப் பெண்களும் முன் வர வேண்டும்…!அமலாபால் தகவல்
சமூக வலைதளங்கள் மூலம் நிகழும் #MeToo மிக முக்கியமானது என்று அமலாபால் தெரிவித்துள்ளார்.
பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்குற்றங்கள் தொடர்பாக சமீபகாலமாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் சமூக ஊடகங் களில், பல்வேறு தருணங்களில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள், “நானும்தான்” (மீ டூ) என்ற முழக்கத்தைப் பயன்படுத்தி உண்மை களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக நடிகை அமலாபால் கருத்து தெரிவித்துள்ளார் .அவர் கூறுகையில், சமூக வலைதளங்கள் மூலம் நிகழும் #MeToo மிக முக்கியமானது. எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது அதனை நான் முன்வந்து வெளியில் சொன்னேன், அதைப்போல் எல்லாப் பெண்களும் சொல்ல முன் வர வேண்டும் என்று அமலாபால் தெரிவித்துள்ளார்.
SOURCE:CINEBAR.IN