பெண்களை மரியாதையுடனும், கெளரவத்துடனும் நடத்த இனி எல்லோரும் கற்றுக்கொள்வார்கள் …!காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
பெண்களை மரியாதையுடனும், கெளரவத்துடனும் நடத்த இனி எல்லோரும் கற்றுக்கொள்வார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்குற்றங்கள் தொடர்பாக சமீபகாலமாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் சமூக ஊடகங் களில், பல்வேறு தருணங்களில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள், ‘நானும்தான்’ (மீ டூ) என்ற முழக்கத்தைப் பயன்படுத்தி உண்மை களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், பெண்களை மரியாதையுடனும், கெளரவத்துடனும் நடத்த இனி எல்லோரும் கற்றுக்கொள்வார்கள். மாற்றத்தை உருவாக்க உண்மைகளை உரக்கவும் தெளிவாகவும் சொல்ல வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.