சிவாஜி மடியில் தவழ்ந்து எம்ஜிஆர் தோளில் விளையாடி கருணாநிதியிடம் பயின்று அரசியல்வாதி ஆகியுள்ளேன்…!கமல்ஹாசன்
சிவாஜி மடியில் தவழ்ந்து எம்ஜிஆர் தோளில் விளையாடி கருணாநிதியிடம் பயின்று அரசியல்வாதி ஆகியுள்ளேன் என்று மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாமக்கல் குமாரபாளையத்தில் சிவாஜிகணேசன் நூலக கட்டட திறப்பு விழாவில்மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் கூறுகையில், MeToo விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.சிலைகளை மீட்க நாங்கள் உதவி செய்கிறோம் என்றபோது வேண்டாம் என்றார்கள்.கோயிலில் உள்ளவர்களின் துணை இல்லாமல் சிலைகள் காணாமல் போயிருக்க வாய்ப்பில்லை.அரசியல் யாத்திரை தொடங்கியது முதலே எனக்கு பள்ளிக்குள் செல்ல அனுமதி இல்லை. சிவாஜி மடியில் தவழ்ந்து எம்ஜிஆர் தோளில் விளையாடி கருணாநிதியிடம் பயின்று அரசியல்வாதி ஆகியுள்ளேன் என்றும் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.