"ஆதார் இல்லை" மருத்துவமனையில் சிகிச்சை மறுப்பு..!!
ஆதார் அட்டை இல்லாததால், தில்லி அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தலையிட்டு, உ.பி. நொய்டா பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி உடல்நலமின்மை காரணமாக சிகிச்சை பெற தில்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரிடம் மருத்துவமனை ஊழியர்கள் ஆதார் கேட்டுள்ளனர். ஆனால் அவரிடம் ஆதார் அட்டை இல்லை. இதைக் காரணமாக வைத்து சிறுமிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை மறுப்பு தெரிவித்தது. இதுகுறித்த தகவல் சமூக வலை தளங்களில் பரவியது. தகவலறிந்த உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வேறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற ஏற்பாடு செய்தார்.ஆதார் கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ள நிலையில் உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சைக்கும் தில்லி அரசு மருத்துவமனை ஆதார் கேட்டு நிர்ப்பந்தித்திருப்பது பொது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
DINASUVADU