நக்கீரன் ஊழியர்களை கைது செய்ய மாட்டோம் …!காவல்துறை உறுதி ..!
நக்கீரன் ஊழியர்களை கைது செய்ய மாட்டோம் என்று காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளனர்.
நக்கீரன் கோபால் கவர்னரை பற்றி தவறாக எழுதியுள்ளதால் கவர்னரின் பணி பாதிக்கபட்டுள்ளது எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற ஆளுநர் அலுவலக ஆணைக்கிணங்க அக்டோபர் 9 ஆம் தேதி காவல்துறை அவரை கைது செய்து அவர் மீது 124 என்ற பிரிவின் கீழ் தேச விரோத வழக்கு பதிவு செய்யப்பட்டது விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இது தமிழக அரசியலில் கடுமையான எதிர்ப்பை உண்டாக்கியது,நக்கீரன் கோபால் கைதை கண்டித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர்.நக்கீரன் கோபாலை விடுதலை செய்ய வேண்டும் , அவர் மீதுபோடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து நக்கீரன் கோபாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ரிமாண்ட் செய்ய ஆஜர்படுத்தப்பட்டார்.விசாரணை நடத்திய நீதிபதி நக்கீரன் கோபால் மீது போடப்பட்ட 124 வழக்கு மீது எந்த முகாந்திரமும் இல்லை என்று 124 வழக்கை இரத்து செய்தார்.
அது மட்டுமில்லாமல் கவர்னரே என்மீது தவறாக எழுதி உள்ளது என்று கவர்னர் சொல்லியதாக இதில் இல்லை.கவர்னர் பணி பாதித்துள்ளது என்றால் எந்த பணி பாதிக்கப்பட்டது என்று இதில் இல்லை ,என்று நீதிபதி கேள்வி எழுப்பினர். வழக்கை விசாரித்த நீதிபதி சரியான ஆதாரம் இல்லாததால் நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க வேண்டும் என்ற அரசு வக்கீலின் கோரிக்கையை ஏற்கமுடியாது என்று கூறி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில் இதேபோல் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நக்கீரன் ஊழியர்கள் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் காவல் துறையை பதில் அளிக்க உத்தரவிட்டது .இதையடுத்து பதில் அளித்த காவல் துறை, நக்கீரன் ஊழியர்களை கைது செய்ய மாட்டோம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்தனர்.